கிராமசபை கூட்டத்தில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் செய்களத்தூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மணல் குவாரிக்கு எதிராக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-10-02 22:45 GMT

மானாமதுரை,

 செய்களத்தூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் நேற்று துனை வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது ஊராட்சி செயலர் ராமச்சந்திரன் வரவேற்றார். வைகை ஆற்றுப்படுகையில் செய்களத்தூர், வாகுடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை அரசு மணல் குவாரி அமைக்க பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளிவந்தன. இதையடுத்து மணல் குவாரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கிரா மக்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

 பின்பு முதல் தீர்மானமாக மணல் குவாரிக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது கிராம மக்கள் அனைவரும் கையெழுத்திட்டனர். இதில் அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் 5 ஆண்டுகளாக இந்த பகுதியில் மழை இல்லை, வைகை ஆற்றிலும் நிர்வரத்து இல்லை, செய்களத்து£ர் வைகை ஆற்றுப்படுகையில் சாயல்குடி, மானாமதுரை உள்ளிட்ட நகரங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடும் வறட்சி காரணமாக குடிக்க கூட தண்ணீர் இன்றி தவிக்கும் நிலையில், அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டால் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிடும். எனவே பொதுப்பணித்துறையினர் மணல் குவாரி அமைப்பதை கைவிட வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்