97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன - ரிசர்வ் வங்கி தகவல்

வாபஸ் அறிவிப்பு வெளியானபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

Update: 2024-05-02 19:36 GMT

புதுடெல்லி,

புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக கடந்த ஆண்டு மே 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டு களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறு கூறியது.

வாபஸ் அறிவிப்பு வெளியானபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், கடந்த 30-ந்தேதி மாலை நிலவரப்படி, ரூ.7 ஆயிரத்து 961 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

மீதி 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கைவசம் உள்ள நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்