தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் 3 நாட்கள் தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி உத்தரவு

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் 3 நாட்கள் தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-03-31 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் 3 நாட்கள் தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

செலவு கணக்கு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் வகுத்து உள்ள விதிகளின்படி வேட்பாளர் அல்லது வேட்பாளரால் நியமிக்கப்பட்ட தேர்தல் முகவர்கள், வேட்பாளர்களின் செலவின கணக்குகளை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் 3 முறை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை), 8-ந் தேதி, 15-ந் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும்.

இதே போன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்குகளை நாளை(செவ்வாய்க்கிழமை), 9 மற்றும் 16-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிப்பிக்கூடத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.

புகார்

இந்த வேட்பாளர்கள் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வரும் போது, வங்கி பதிவேடு, ரொக்கப்பதிவேடு, அன்றாட கணக்கு பதிவேடு, சுருக்க அறிக்கை, அனைத்து விலைப்பட்டிகள் மற்றும் செலவு சீட்டுகள் ஆகியவற்றையும், அதன் நகல்கள் 2-ம் சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு ஆஜராகி தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க தவறினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும். அறிவிப்பு வழங்கப்பட்ட நாளிலும் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்