உடுப்பியில், நடுக்கடலில் மீனவர்கள் விரித்த வலையில் 1,200 கிலோ அரிய வகை மீன் சிக்கியது ரூ.60 ஆயிரத்திற்கு ஏலம் போனது

உடுப்பியில், நடுக்கடலில் மீனவர்கள் விரித்த வலையில் 1,200 கிலோ அரிய வகை மீன் சிக்கியது. அந்த மீன் ரூ.60 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

Update: 2019-05-12 22:00 GMT
மங்களூரு, 

உடுப்பியில், நடுக்கடலில் மீனவர்கள் விரித்த வலையில் 1,200 கிலோ அரிய வகை மீன் சிக்கியது. அந்த மீன் ரூ.60 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

அரிய வகை மீன் சிக்கியது

உடுப்பி அருகே மல்பே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நிகில் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது மீனவர்கள் விரித்த வலையில் 1,200 கிலோ எடை கொண்ட கொம்புதொரகே என்ற அரிய வகை மீன் சிக்கியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மீனவர்கள், அந்த மீனை படகில் போட்டு எடுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

ரூ.60 ஆயிரத்திற்கு ஏலம்

இந்த நிலையில் மீனவர்கள் வலையில் அரிய வகை மீனான கொம்புதொரகே சிக்கியது பற்றி அறிந்ததும் அங்கு சக மீனவர்கள் கூடினார்கள். மேலும் சிலர் அந்த அரிய வகை மீனை தங்களின் செல்போனில் படம் பிடித்தும் கொண்டனர்.

இதனை தொடர்ந்து அந்த அரிய வகை மீன் மல்பே துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் அந்த அரிய வகை மீனானது ஏலத்தில் விடப்பட்டது. அந்த அரிய வகை மீனை வாங்க வியாபாரிகள் போட்டா, போட்டி போட்டனர். இறுதியில் அந்த அரிய வகை மீனை மங்களூருவை சேர்ந்த கருவாடு வியாபாரி ஒருவர் ரூ.60 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்து சென்றார்.

மேலும் செய்திகள்