தொடர் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் 2–வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

தொடர் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை 2–வது முறையாக போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.;

Update:2019-05-16 04:15 IST

சேலம், 

சேலம் அஸ்தம்பட்டி மேற்கு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 26). இவர் கடந்த மாதம் கொண்டப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்ற பூபாலன் என்பவரை வழிமறித்தார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 1 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விஜயகுமாரை கைது செய்தனர். விசாரணையில், விஜயகுமார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கன்னங்குறிச்சி பகுதியில் மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி 10½ பவுன் நகையை பறித்து சென்ற வழக்கு கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ளது.

மேலும் அவர் மீது மாநகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் பதிவாகி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதவிர அவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் விஜயகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மாநகர போலீஸ் கமி‌ஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை பரிசீலித்து விஜயகுமாரை 2–வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் சங்கர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்