நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ மகன்: எச்சரித்து அனுப்பிய போலீசார்

நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக, சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2025-12-08 06:57 IST

மதுரை

மதுரையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வருவதற்காக, நேற்று மதியம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தார். விமான நிலைய வளாகத்தில் அவர் நடந்து வந்தபோது, தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டு வழியனுப்பினர். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக, சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மகன் அக்சய் மார்க்கண்டேயன் என்று தெரியவந்தது. அவரை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்