அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்: டிரைவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் போலீசார் விசாரணை

சுவாமிமலை அருகே அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.;

Update:2019-05-22 03:45 IST
கபிஸ்தலம்,

திருப்பதியிலிருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. சுவாமிமலை அருகே உள்ள அசூர் சாலை வழியாக இந்த பஸ் வந்து கொண்டிருந்த போது எதிரில் காரைக்காலில் இருந்து பெரம்பலூருக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த லாரியும் எதிரில் வந்த அரசு பஸ்சும் திடீரென நேருக்கு நேர் மோதியது.

5 பேர் படுகாயம்

இதில் லாரியை ஓட்டு வந்த கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா வல்லம்படுகையை சேர்ந்த கலியபெருமாள் மகன் கலைவாணன்(வயது29), அரசு பஸ் டிரைவர் சென்னையை சேர்ந்த நடேசன் மகன் வேல்முருகன்(51) மற்றும் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். உடனே சம்பவ இடத்துக்கு திரண்டு வந்த மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்