காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கலெக்டர் கொடியேற்றினார்

காஞ்சீபுரத்தில் சுதந்திர தினத்தையொட்டி கலெக்டர் பொன்னையா தேசியகொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2019-08-15 22:07 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் சுதந்திர தின விழா நேற்று நடந்தது. இதில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டர் ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 144 மதிப்பீட்டில் 49 பயனாளிகளுக்கு நிவாரண உதவி தொகைகளை வழங்கினார்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கதர் ஆடை அணிவித்து கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, மண்டல நகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், நகராட்சி என்ஜினீயர் மகேந்திரன், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பெருமான் ராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் கவிஞர் கலியபெருமாள் தலைமையில் தேசியகொடி ஏற்றப்பட்டது. பொருளாளர் தாஜுதீன், வணிகர் சங்க தலைவர் காதர் உசேன் தலைமையில் ஆசிரியை நளினி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊரப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் கருணாகரன் தேசியகொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மண்ணிவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் ராமபக்தனும், வண்டலூர் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் வீரராகவனும் தேசியகொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

நல்லம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் ஹரிகிருஷ்ணன், காரணைப்புதுச்சேரி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன், ஊனைமாஞ்சேரியில் ஊராட்சி செயலாளர் டில்லி தேசிய கொடியை ஏற்றினர். நெடுங்குன்றம் ஊராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஊராட்சி செயலாளர் ஏழுமலை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியை வட்டார வளர்ச்சி அலுவலர் சாய் கிருஷ்ணன் ஏற்றி வைத்தார். மாடம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் மொய்தீன், கரசங்கல் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் நாசர், ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் இதயராஜ், தேசியகொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். வைப்பூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் புருஷோத்தமன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த கோர்ட்டில் பார் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாநில துணைத்தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் சங்க மாநில துணை தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட நீதிபதி வசந்த லீலா கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் நீதிபதிகள் வேல்முருகன். கபீர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இது போல செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. செல்வம் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பரனூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலர் நடராஜன் தேசிய கொடியேற்றினார். ஆய்வாளர் செல்வராஜ் இனிப்புகள் வழங்கினார். திருத்தேரி அரசு நடுநிலை பள்ளியில் கூட்டுறவு சங்க தலைவரும், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான கவுஸ் பாஷா கொடியேற்றினார். வித்யாசாகர் மகளிர் கலைக்கல்லூரியில் தாளாளர் விகாஷ் சுரானா தேசிய கொடியை ஏற்றினார்.

மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் பேருராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் தேசிய கொடியை ஏற்றினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெங்கடேசன், பள்ளிப்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம் தேசிய கொடியை ஏற்றினர்.

ஒரத்தி ஊராட்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்