கூடுதல் விலைக்கு யூரியா உரம் விற்றால் நடவடிக்கை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு யூரியா உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-11-12 23:00 GMT
நன்னிலம்,

முதல்-அமைச்சர் உத்தரவுக்கு இணங்க யூரியா உரம் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் விலைக்கு யூரியா உரம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடை ஊழியர் களின் கோரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறோம். எனவே அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தவிர்க்கலாம். ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதற்கு கட்சி நிர்வாகிகளை தயார்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வழிநடத்தி செல்கிறார்கள்

இதனைத்தொடர்ந்து அவரிடம் தலைமை வெற்றிடம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இதனை மக்கள் தான் முடிவு செய்ய முடியும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வலிமையான தலைமையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் மூலம் மக்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் வழி நடத்தி செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்