சத்தியமங்கலம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.60-க்கு விற்பனை

சத்தியமங்கலம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆனது.

Update: 2019-12-11 22:00 GMT
சத்தியமங்கலம், 

வெங்காய விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த நிலையில் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பல்லாரி, சாம்பார் வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக அங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்ததால் அதன் விலை உயர்ந்து ரூ.200 வரை விற்றது.

இந்த நிலையில் மத்திய அரசு எகிப்து நாட்டில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெங்காயத்தை இறக்குமதி செய்தது. இதனால் வெங்காய விலை சற்று குறைய தொடங்கியுள்ளது.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள வாரச்சந்தைக்கு நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலம் மற்றும் ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையத்தில் இருந்து சின்ன வெங்காயம் கொண்டு வரப்பட்டது. இது ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வாரச்சந்தை அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு மைசூரில் இருந்து முதல் தர பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டன. இது நேற்று முன்தினம் கிலோ ரூ.140-க்கு விற்பனை ஆனது.

சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை ஆனது. நேற்று கிலோவுக்கு ரூ.20 விலை குறைந்து பெரிய வெங்காயம் ரூ.120-க்கும், சின்ன வெங்காயம் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்