ஏலகிரிமலையில் தாவரவியல் பூங்கா அமைக்கும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்

ஏலகிரிமலையில் தாவரவியல் பூங்கா அமைக்கும் இடத்தை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2019-12-12 22:30 GMT
ஜோலார்பேட்டை, 

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டத்தை அறிவித்த போது ஏலகிரிமலையில் ரூ.50 லட்சத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என கூறினார்.

அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் ஏலகிரிமலை பள்ளக்கனியூர் பகுதியில் தாவரவியல் பூங்கா அமைக்கும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் அத்தனாவூரில் கட்டப்பட்டு வரும் திறந்தவெளி கலையரங்கம், பொதுமக்கள் தங்கும் யாத்ரி நிவாஸ், பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பயணியர் விடுதி, உண்டு, உறைவிடப்பள்ளி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். ஏலகிரி மலையை மேம்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத மலையாக சுத்தமாகவும் வைத்து கொள்ள துண்டு பிரசுரங்களை வழங்கினார். சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலாத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

அப்போது ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சந்திரன் உள்பட சுற்றுலாத்துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்