சபரிமலையில் இருந்து புறப்பட்ட அய்யப்ப தர்ம பிரசார ரதம் திருவாரூருக்கு வந்தது

சபரிமலையில் இருந்து புறப்பட்ட அய்யப்ப தர்ம பிரசார ரதம் திருவாரூருக்கு வந்தது.

Update: 2019-12-12 22:30 GMT
திருவாரூர்,

சபரிமலை அய்யப்பன் சன்னதியில் ஏற்றப்பட்டு இருக்கும் திருவிளக்கில் இருந்து அய்யப்ப ஜோதி ஏற்றப்பட்டு, அய்யப்ப பிரசார ரதத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த அய்யப்ப தர்ம பிரசார ரதம் அங்கிருந்து புறப்பட்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமமாக சென்று அங்குள்ள கோவில்கள், வீடுகளிலும் விளக்குகளில் ஜோதி ஏற்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்த அய்யப்ப தர்ம ரதம் நேற்று திருவாரூருக்கு வந்தது. மாற்றுரைத்த விநாயகர் கோவிலில் இருந்து ரத யாத்திரை புறப்பட்டது. நிகழ்ச்சியில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் மாநில பொதுச்செயலாளர் சிவராமன், ஆத்மானந்தா சுவாமிகள், ஆனந்தாநந்தா சுவாமிகள், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் கனகராஜ், குருசாமி கனகசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடியில் நிறைவு

இந்த ரதம் திருவாரூரை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி, கோட்டூர், நன்னிலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், வலங்கைமான் வழியாக சென்று மன்னார்குடியில் நிறைவு அடைகிறது. அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ரதம் செல்கிறது. 

மேலும் செய்திகள்