18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்

திருப்பூரில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2020-01-03 22:45 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.

இதை முன்னிட்டு இன்று(சனிக்கிழமை), நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 11, 12-ந் தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே கடந்த 1-ந் தேதியில் 18 வயது பூர்த்தியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை அதற்கான படிவங்களில் உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் பொதுமக்கள்www.nvsp.inஎன்ற இணையதளம் மூலமாகவும், voter helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள உதவி வாக்காளர் பதிவு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் 1950 என்ற கட்ணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்