நாமக்கல்லில் லாரிகள் வாங்கி ரூ.1.13 கோடி கடன் மோசடி; கணவன்-மனைவி கைது

நாமக்கல்லில் லாரிகள் வாங்க பெற்ற கடன்தொகையை திருப்பி செலுத்தாமல் ரூ.1 கோடியே 13 லட்சம் மோசடி செய்த வழக்கில் கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-12 00:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது42). லாரி அதிபர். இவரது மனைவி கண்ணம்மாள் (40).

இவர்கள் நாமக்கல்லில் உள்ள தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் 4 லாரிகள் வாங்க ரூ.1 கோடியே 13 லட்சத்து 53 ஆயிரம் கடன் வாங்கி இருந்தனர். இந்த கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து விட்டதாகவும், கடனை திருப்பி கேட்டபோது செந்தில்குமார் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் நிதி நிறுவனத்தின் இணைமேலாளர் சுரே‌‌ஷ் (36) நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் புகார் செய்தார்.

கைது

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி நாமக்கல் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் லாரி அதிபர் செந்தில்குமார், அவரது மனைவி கண்ணம்மாள் ஆகிய இருவரையும் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்