ஸ்கூட்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி

மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி ஸ்கூட்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-04-29 02:08 GMT

லக்னோ,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 1ம் கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 26ம் தேதியும் நடைபெற்றது. 3ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற்ற உள்ளது. 4ம் கட தேர்தல் 13ம் தேதியும், 5ம் கட்ட தேர்தல் 20ம் தேதியும், 6ம் கட்ட தேர்தல் 25ம் தேதியும், 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே, உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் அமேதி தொகுதியில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள 5ம் கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி(வயது 48) மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி நேற்று ஸ்கூட்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். சாலைகளில் நின்ற பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்தார்.

முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராகுல்காந்தியை வீழ்த்தி வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  



Tags:    

மேலும் செய்திகள்