கொம்பாக்கம் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. புதுவை அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் இதுவரை 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-06-01 00:38 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மூலக்குளம் அன்னை தெரசா நகர், 3-வது முதன்மை சாலை, 4-வது குறுக்குத்தெரு ஆகியவற்றுக்கும், ரெட்டியார்பாளையம் குண்டுபாளையம் வீரையா வீதி, கொம்பாக்கம் நடுத்தெடு ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

புதுவை மாநிலத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,405 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16,459 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1,397 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்