பாலியல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 2-வது முறை நோட்டீசு

சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் இன்று அதிகாலையில் பெங்களூருவில் இருந்து ஹாசன் சென்றனர்.

Update: 2024-05-03 16:26 GMT

பெங்களூரு,

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் எம்.பி.யாக இருந்து வரும் பிரஜ்வல் ரேவண்ணா மீது ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுரா போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு வழக்குப்பதிவாகி உள்ளது. இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்று விட்டதாகவும், அங்கிருந்து துபாய் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையான ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராக கோரி சிறப்பு புலனாய்வு குழு நோட்டீசு அனுப்பி வைத்திருந்தது. 2 பேரும் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழு வை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் இன்று அதிகாலையில் பெங்களூருவில் இருந்து ஹாசன் சென்றனர்.

பின்னர் பாலியல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணாவுக்கு 2 முறையாக நோட்டீசு கொடுத்துள்ளனர். குறிப்பாக ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுரா அருகே உள்ள 2 பண்ணை வீடுகளிலும் விசாரணைக்கு ஆஜராகும்படி கோரிய நோட்டீசை போலீசார் ஒட்டி வைத்தார்கள். 24 மணிநேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறுகையில், பிரஜ்வல் ரேவண்ணா முதலில் ஜெர்மனியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது பற்றி தகவல் கர்நாடக போலீசாரிடம் இல்லை. பிரஜ்வல் ரேவண்ணா எங்கு உள்ளார்? என்பது பற்றி ஆராய கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. அதனை மத்திய அரசே செய்ய வேண்டும். மத்திய அரசு அனுமதித்தால், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வெளிநாட்டுக்கு சென்று பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யும் நடவடிக்கையை எடுக்கலாம். ஆனால் தற்போது விசாரணைக்கு ஆஜராக 2-வது நோட்டீசு வழங்கி உள்ளோம். அந்த நோட்டீஸ் முடிந்த பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்