எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ‘ஹால்டிக்கெட்’டுடன் முக கவசம்

தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ‘ஹால்டிக்கெட்’டுடன் முக கவசம் வழங்கப்பட்டது.

Update: 2020-06-09 01:48 GMT
தேனி,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு நேற்று பள்ளிகளில் ‘ஹால்டிக்கெட்’ மற்றும் முக கவசம் வழங்க அரசு உத்தரவிட்டது. தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 16 ஆயிரத்து 195 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் ‘ஹால்டிக்கெட்’ மற்றும் தலா 2 முக கவசங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு செல்போன் மூலமும், பள்ளிக்கு அருகாமையில் உள்ள மாணவ, மாணவிகளை நேரிலும் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவ-மாணவிகளுக்கு ‘ஹால்டிக்கெட்’, முக கவசங்கள் வழங்கும் பணி நடந்தது. அதன்படி தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் முக கவசம், ‘ஹால்டிக்கெட்’ ஆகியவற்றை வழங்கி, தேர்வை சிறப்பாக எழுத வாழ்த்து தெரிவித்தனர்.
தேனி,ஜூன்.9-

மேலும் செய்திகள்