ஓசூர் சிப்காட் பகுதியில் பெண்கள் பாதுகாப்பிற்காக புதிய ரோந்து வாகனம்

ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

Update: 2020-06-10 00:58 GMT
ஓசூர்,

பெண்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் ஓசூர் சிப்காட் திட்ட அலுவலகம் சார்பில், புதிதாக ரோந்து வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், ஓசூர் சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடாசலம், அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ஹோஸ்டியா சங்க தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தொழில் நகரமான ஓசூரில், பெங்களூரு சாலை மற்றும் கிருஷ்ணகிரி சாலை ஆகிய 2 இடங்களில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில் பணி செய்யும் பெண்கள், வேலைக்கு செல்லும்போதும், பணி முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பும்போதும் அவர்களிடம் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடக்கிறது. இ

துபோன்ற குற்ற சம்பவங்களை கண்காணித்து தடுக்கும் வகையில், ஓசூர் சிப்காட் திட்ட அலுவலகம் சார்பில் ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 7305085145 என்ற செல்போன் எண், அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைக்கலாம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்