வேதாரண்யத்தில் காற்றுடன் பலத்த மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்தயத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் உப்பளங்களில் புகுந்து தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-05 05:02 GMT
வேதாரண்யம், 

தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் 2-ம் இடத்தில் வேதாரண்யம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் உப்பு லாரிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் வேதாரண்யத்தில் நேற்று காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் கடினல்வயல், கருப்பம்புலம், கோடியக்கரை, கோடியக்காடு ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

உப்பு உற்பத்தி பாதிப்பு

இந்த மழையால் உப்பளங்களில் மழை நீர் புகுந்து தண்ணீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பு டன் ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் உப்பு விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்