மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2021-09-30 20:58 GMT
வத்திராயிருப்பு, 
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
பலத்த மழை 
வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. 
30 நிமிடத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக பெய்த மழையால் வத்திராயிருப்பில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பொது மக்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமப்பட்டனர். இதனால் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வந்த நிலையில் நேற்று மாலை பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் நாற்று நடவு பணி மேற்கொண்டு வருவதால் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். 
ஆலங்குளம் 
அதேபோல ஆலங்குளம் பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை மழை பெய்தது. ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டி, ராசாப்பட்டி டி. கரிசல்குளம், டி.மேட்டூர், தொம்ப குளம், கொங்கன்குளம், மேலப்பழையாபுரம், கண்மாய் பட்டி, வலையபட்டி,மேலாண்மறைநாடு அப்பயநாயக்கர்பட்டி, கோவில் செந்தட்டியாபுரம், அருணாசலபுரம், சீவலப்பேரி, கீழாண்மறைநாடு, குறுஞ்செவல், புளியடிபட்டி, சுண்டங்குளம், ஏ.லட்சுமிபுரம், கோபாலபுரம், ஆகிய கிராமங்களில் மழை பெய்தது. 
மக்காச்சோள பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறினர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. 

மேலும் செய்திகள்