சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.;

Update:2026-01-11 12:16 IST

சென்னை,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மத்திய அரசு, வளர்ச்சியடைந்த பாரதம் - வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (விபி-ஜி ராம் ஜி) என மாற்றி உள்ளது. இதில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை காப்பாற்றுவதற்காக 45 நாள் போராட்டத்தை காங்கிரஸ் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்ட விதம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை எழும்பூரில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்