மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Update: 2021-10-04 14:50 GMT
ஊட்டி

ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் மஞ்சூரில் இருந்து கோவை மாவட்டம் காரமடைக்கு செல்லும் சாலையில் முள்ளி பகுதியில் ஒரே இடத்தில் 4 மரங்கள் முறிந்து விழுந்தன. 

இதனால் மஞ்சூரை நோக்கி வந்த அரசு பஸ், சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரமானதால் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் மரங்களை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 20 பயணிகளுடன் அரசு பஸ் மஞ்சூருக்கு செல்ல முடியாமல், மீண்டும் காரமடை க்கு சென்றது. 

அங்கிருந்து மேட்டுப்பாளையம், பர்லியார், காட்டேரி வழியாக மஞ்சூருக்கு பஸ் நள்ளிரவில் 5 மணி நேரம் தாமதமாக வந்தது. மரங்கள் விழுந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். சுற்றுலா வாகனங்களும் திருப்பி விடப்பட்டது.
அதன்பின்னர் மாநில நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- கூடலூர்-16, தேவாலா-23, செருமுள்ளி-13, ஓவேலி-12 உள்பட 93 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்