காப்பக உதவியாளருக்கு ஜாமீன்

குழந்தை கடத்தல் வழக்கில் கைதான காப்பக உதவியாளருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.;

Update:2021-10-05 03:06 IST
மதுரை,

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் அறக்கட்டளை செயல்பட்டது. இதன்கீழ் முதியோர், ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த காப்பகத்தில் இருந்த குழந்தைகள், கொரோனாவுக்கு பலியானதாக போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து அந்த குழந்தைகளை விற்பனை செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அறக்கட்டளை நிர்வாகி சிவகுமார், உதவியாளர் மதர்ஷா உள்பட பலரை கைது செய்தனர். இந்தநிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு மதர்ஷா, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், மனுதாரரை கைது செய்து 92 நாட்களாகியும் இதுவரை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்