தெலுங்கானாவில் 17 தொகுதிகளிலும் தனித்து போட்டி என பா.ஜனதா அறிவிப்பு

தெலுங்கானாவில் 17 தொதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது.

Update: 2019-02-03 12:43 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா மாநில பா.ஜனதா எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான பண்டாரு தத்தாரேயா செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநிலத்தில் பா.ஜனதா தனியாகவே 17 தொகுதிகளிலும் போட்டியிடும். மாநிலத் தேர்தல் என்பது பாராளுமன்றத் தேர்தலில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது. பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.,” என கூறியுள்ளார். மாநிலத்தில் டிசம்பரில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. 

400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும் என்று பா.ஜனதா பணியாற்றி வருகிறது. பிரதமர் மோடி ஊழலற்ற அரசை கொடுத்துள்ளார், அவருடைய செல்வாக்கு மேலும் அதிகரித்துதான் உள்ளது.  பிரதமர் மோடியை  மோடியை விமர்சிக்கும் தலைவர் ஊழல் செய்தவர்களாக இருப்பார், அல்லது சிறுபான்மையினர் வாக்குகளுக்காக பணியாற்றுபவர்களாக இருப்பார்கள் எனவும் விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் செய்திகள்