3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத ஓட்டுப்பதிவு

3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.

Update: 2019-04-18 10:58 GMT
சென்னை,

17 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர 38 தொகுதிகளில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக  நடந்து வருகிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

வாக்குப்பதிவு விபரங்களை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. காலை 9 மணிக்கு 13 சதவீதமும், காலை 11 மணிக்கு 30.62 சதவீதமும் பதிவாகி இருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத ஓட்டு பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வாக்காளர்களை கவரும் விதமாக பல்வேறு அலங்காரங்களுடன் வாக்குச்சாவடி மையம் காட்சியளித்த‌து. வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக மன்னார்குடியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி மையத்தின் வாசலில் வாழை மர தோரணங்களும், பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. இதனை கண்டு வாக்காளர்கள் வியந்தனர். 

திருவள்ளூர் : சத்திரை கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு - அடிப்படை வசதிகள் செய்து தராததால் கிராம மக்கள் யாரும் இதுவரை வாக்களிக்கவில்லை.

வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது:-

3 மணி நிலவரப்படி   52.02 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. கரூரில் அதிகப்பட்சமாக 56. 85 சதவீதமும், மத்திய சென்னையில் குறைந்தப்பட்சமாக 45.65 சதவீதமும்,   சட்டசபை இடைத்தேர்தலில் 55. 97 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்