"பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோரும்" - குலாம் நபி ஆசாத் கருத்து

இந்தியாவின் பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் உண்மையில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-17 09:13 GMT
புதுடெல்லி

டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-

பிரதமர் பதவிக்கு, காங்கிரஸ் கட்சி உரிமை கோராது என யாரும் கூற முடியாது. பாரம்பரியமிக்க, பழமையான கட்சி காங்கிரஸ் என்றும், 5 ஆண்டுகள் ஆட்சி செய்திட, அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டியது அவசியம். இந்தியாவின் பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் சிறிதளவும் உண்மையில்லை என கூறினார்.

முன்னதாக சிம்லாவில் பேட்டி அளித்த குலாம் நபி ஆசாத் நரேந்திர மோடியால் இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு வர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை நிச்சயம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதை ஏற்று கருத்து ஒற்றுமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம். கிடைக்காவிட்டாலும் அது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என்று அவர் கூறி இருந்தார். பிரதமர் பதவி யாருக்கு என்பதை பிரச்சினை ஆக்க மாட்டோம். எங்கள் (காங்கிரஸ்) தலைமை இந்த வி‌ஷயத்தில் மிக, மிக தெளிவாக உள்ளது. மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்துடன் யாரை பிரதமராக தேர்வு செய்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் விடாப்பிடியாக உரிமை கோராது என கூறி  இருந்தார்.

மேலும் செய்திகள்