ரூ.70 கோடிக்கு ஏலம் போன கால்பந்து ஜாம்பவான் மரடோனா டீசர்ட்-யின் பின்னணி என்ன தெரியுமா?

மரடோனாவின் புகழ்பெற்ற டீசர்ட் ஒன்று லண்டனில் உள்ள ஏல நிறுவனத்தால் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

Update: 2022-05-05 08:02 GMT
Image Courtesy : AFP
லண்டன், 

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனா 1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கால்பந்து அரங்கில் கலக்கியவர். 

1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மரடோனா உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர்.

இவர் கடந்த 2020ம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்த நிலையில் தற்போது மரடோனாவின் புகழ்பெற்ற  டீசர்ட் ஒன்று லண்டனில் உள்ள ஏல நிறுவனத்தால் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

இந்த டீசர்ட் இந்திய மதிப்பில் சுமார் ரூ.70 கோடிக்கு ஏலம் போகியுள்ளது. 1986- ஆம் ஆண்டு கால்பந்து உலககோப்பை  கால் இறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அர்ஜென்டினா அணி விளையாடியது. 

இந்த போட்டியில் மரடோனா தான் அடித்த ஒரு கோல் குறித்து கூறுகையில், "கொஞ்சம் மரடோனாவின் தலையால், சிறிது கடவுளின் கையால்" அடிக்கப்பட்டதாக கூறினார்.

அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்த பிறகு இங்கிலாந்து அணியின் வீரர் ஸ்டீவ் ஹாட்ஜ் மற்றும் மரடோனா தங்கள் டீசர்ட்-டை பரிமாறி கொண்டனர்.

அப்போது இருந்து அவரின் இந்த டீசர்ட் "கடவுளின் கை" டீசர்ட் என்று பிரபலமாக அறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்