ஐதராபாத் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து ரெயில் சேவை கடும் பாதிப்பு

மராட்டியத்தின் பல்கர்ஷா பகுதியை நோக்கி நேற்று அதிகாலையில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

Update: 2017-01-06 22:45 GMT
ஐதராபாத்,

மராட்டியத்தின் பல்கர்ஷா பகுதியை நோக்கி நேற்று அதிகாலையில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் ஐதராபாத் அருகே உள்ள விகிர்கான் ரெயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அதிகாலை நேரத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் செகந்திராபாத் மண்டல ரெயில்வே மேலாளர் உள்பட தென்மத்திய ரெயில்வேயின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக ராட்சத கிரேன் மற்றும் மீட்பு ரெயிலும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சரக்கு ரெயில் தடம் புரண்டதை தொடர்ந்து அந்த பகுதியில் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியது. அந்த வழியாக செல்லும் ஏராளமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

மேலும் செய்திகள்