4 மனைவி உள்ளவர்கள் தான் மக்கள் தொகை உயர்வுக்கு காரணம் பாரதீய ஜனதா எம்.பி பேச்சால் சர்ச்சை

4 மனைவி உள்ளவர்கள் தான் மக்கள் தொகை உயர்வுக்கு காரணம் என பாரதீய ஜனதா எம்.பி பேச்சால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

Update: 2017-01-07 10:14 GMT
லக்னோ

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 7 கட்ட மாக தேர்தல் நடைபெற உள்ளது.அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் டெல்லியில் முதல்-மந்திரி யாக இருந்த ஷீலா தீட்சித்தை உ.பி. முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து களத்தில் உள்ளது.

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. மெஜாரிட்டி பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் வெளியானது. அதற்கு ஏற்ப பா.ஜ.க. மூத்த தலைவர்களும் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.

பாரதீய ஜனதா தலைவர்கள் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர்.பாரதீய ஜனதா எம்பி. சாக்‌ஷி மகராஜ் மீரட்டில் நடந்த ஒரு கோவில் திறப்பு விழாவில் கல்ந்து கொண்டு பேசும் போது நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு முஸ்லீம் சமூகம் தான் காரணம் என குற்றம்சாட்டி பேசி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவர் கூறியதாவது.

மக்கள் தொகை பெருக்கம் என்பது இந்துக்களால் இல்லை.நான்கு மனைவிகள் 40 குழந்தைகள் என்ற கருத்து ஆதரவாளர்களால் உயர்ந்து உள்ளது.என கூறினார்.

இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் இந்த் பேச்சுக்கு தேர்தல் ஆணியம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மிட்டல் கூறும் போது

சாக்‌ஷி மகராஜ் பேச்சு  சாதி மத அடிப்படையிலான தாக்குதலாகும். இது சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட உத்தரவை மீறுவதாகவும். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாங்கள்  தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். என கூறினார்.

மேலும் செய்திகள்