என்.எஸ்.ஜியில் இந்தியா உறுப்பினராக இணைவதற்கு போர்ச்சுக்கலின் தொடர் ஆதரவுக்கு நன்றி பிரதமர் மோடி

போர்ச்சுகல் நாட்டு பிரதமர் அன்டோனியோ கோஸ்டா அரசு முறை பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். டெல்லி வந்த அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

Update: 2017-01-07 14:55 GMT
புதுடெல்லி,

போர்ச்சுகல் நாட்டு பிரதமர் அன்டோனியோ கோஸ்டா அரசு முறை பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். டெல்லி வந்த அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்நிலையில், இந்தியா - போர்ச்சுக்கல் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி மற்றும் போர்ச்சுக்கல் பிரதமர் அன்டோனியா கோஸ்டா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:

என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராக இணைவதற்கு போர்ச்சுக்கலின் தொடர் ஆதரவுக்கு நன்றி. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராக இணைவதற்கு போர்ச்சுக்கலின் தொடர் ஆதரவு அளித்தற்கு அந்நாட்டிற்கு நாம் கடமை பட்டுள்ளோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் செய்திகள்