11.5 சதவீத வட்டியுடன் விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க நடவடிக்கை வங்கிகளுக்கு தீர்ப்பாயம் உத்தரவு

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு சென்று விட்டார்.

Update: 2017-01-19 20:38 GMT
பெங்களூரு,

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு சென்று விட்டார்.

இதற்கிடையே, அவர் தங்கள் வங்கிகளிடம் வாங்கிய மொத்தம் ரூ.6 ஆயிரத்து 203 கோடியை மீட்டுத்தரக்கோரி, பாரத ஸ்டேட் வங்கி தலைமையில் 17 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பு சார்பில், பெங்களூருவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அந்த வழக்கில், தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரி கே.சீனிவாசன் நேற்று தீர்ப்பு அளித்தார்.

அதில், ரூ.6 ஆயிரத்து 203 கோடியை ஆண்டுக்கு 11.5 சதவீத வட்டியுடன் விஜய் மல்லையா மற்றும் அவரது நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கும் பணியை வங்கிகள் தொடங்கலாம் என்று உத்தரவிட்டார். நிலுவையில் இருந்த 20 மனுக்களை அவர் ‘பைசல்’ செய்து உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்