பிரசவத்தின்போது நர்ஸ் மரணம்: ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள் 5 பேர் பணி இடைநீக்கம்

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தவர் ரஜ்பீர் கவுர். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு அதே ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்கப்பட்டது.

Update: 2017-02-05 20:30 GMT

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தவர் ரஜ்பீர் கவுர். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு அதே ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 16–ந் தேதி பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது அவருடைய குழந்தை இறந்தது. பின்னர், உடல் நிலை மோசமடைந்து தாயும் உயிர் இழந்தார். தாயும், குழந்தையும் இறந்ததற்கான காரணத்தை இதுவரை ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிக்கவில்லை.

இதையடுத்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நர்சுகள் சங்கத்தினர், ‘‘டாக்டர்களின் அலட்சியம் காரணமாகத்தான் நர்ஸ் ரஜ்பீர் கவுரும், அவருடைய குழந்தையும் இறக்க நேர்ந்தது. எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்’’ என அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து எய்ம்ஸ் மகப்பேறு பிரிவின் டாக்டர்கள் தர்‌ஷணா, அனுஷா, அம்லி, நிஷா, மணிஷ் டே ஆகிய 5 பேரை பணி இடைநீக்கம் செய்து ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆஸ்பத்திரியின் மூத்த டாக்டர் டி.கே.சர்மா தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது.

மேலும் செய்திகள்