இணையதளங்களில் பாலியல் வீடியோக்களை தடுக்க முடியாதா?

இணையதளங்களில் பாலியல் வீடியோக்களை தடுக்க முடியாதா? கூகுள் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

Update: 2017-02-22 22:10 GMT

புதுடெல்லி

ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம், ‘வாட்ஸ்அப்’பில் வெளிவந்த 2 கற்பழிப்பு வீடியோ காட்சிகளுடன் ஒரு கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியது. அதையே ஒரு வழக்காக சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பாலியல் வன்முறை வீடியோக்களை இணையதளங்களில் வெளியிடுவதை இணையதள சேவை வழங்கும் நிறுவனமான ‘கூகுள்’ தடுக்க முடியாதா?’ என்று நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு ‘கூகுள்’ நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் அபிஷேக் சிங்வி, ‘அத்தகைய வீடியோக்களை நாங்களாக கண்டுபிடிக்க முடியாது. எங்களிடம் தகவல் தெரிவித்தால், 36 மணி நேரத்துக்குள் அதை நீக்குவோம்’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்