ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் -பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.;

Update:2017-03-09 09:36 IST
ஜம்மு,

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து இன்று அதிகாலை முதல் வீடு வீடாக சோதனை நடத்தி வந்தனர்.

அப்போது வீடு ஒன்றில் பதுங்கி இருந்த 4 முதல் 5 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி சுட ஆரம்பித்தனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.  இன்னும் 4 முதல்  5 பேர் இருக்கலாம் என்று நம்பப்படுவதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்