மத்திய மந்திரி ஜெய்சங்கர் நாளை இஸ்ரேல் பயணம்

இஸ்ரேல் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார்.;

Update:2025-12-15 17:21 IST

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது அந்நாட்டின் உயர்மட்ட தலைவர்களைச் சந்தித்து, இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து அவர் விவாதிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்சங்கர் தனது பயணத்தின்போது இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை சந்திக்க உள்ளார். மேலும், இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி கிதியோனை சந்தித்து அவருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

சமீபத்தில் இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது இரு தலைவர்களும் கூடிய விரைவில் சந்திப்பதாக ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்