ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.

Update: 2017-03-09 21:30 GMT

புதுடெல்லி

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. இது குறித்து பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்கா, தனியார் மயமாக்கும் தகவல்களை மறுத்தார்.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில் கூறும்போது, ‘ஏர் இந்தியாவில் முக்கியமான முதலீட்டாளராக வங்கிகளை இணைப்பது குறித்தோ அல்லது விமான நிறுவனத்தை தனியார் மயமாக்குவது குறித்தோ அரசு பரிசீலிக்கவில்லை. இது தொடர்பான எந்த திட்டமும் அரசிடம் இல்லை’ என்று கூறினார்.

ஏர் இந்தியாவின் வளர்ச்சியை பெருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விமான நிறுவனத்தின் செலவுகள் மற்றும் இழப்புகளை குறைப்பதற்காக ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது என்றும் மந்திரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்