அரசியல் ஆதிக்கம் மிகுந்த தலைவராக மோடி உருவாகி இருக்கிறார் ப.சிதம்பரம் கருத்து

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மும்பை இந்திய வர்த்தக சபை கூட்டத்தில் நேற்று பேசும்போது கூறியதாவது:–

Update: 2017-03-11 20:30 GMT

மும்பை

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மும்பை இந்திய வர்த்தக சபை கூட்டத்தில் நேற்று பேசும்போது கூறியதாவது:–

5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி, இந்தியாவில் அரசியல் ஆதிக்கம் மிகுந்த தலைவராக உருவாகி இருப்பதை காட்டுகிறது. இந்த தேர்தல் வெற்றிகளால் டெல்லி மேல்–சபையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தவிர அவர்கள் அங்கு பெரும்பான்மையும் பெறவும் வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களால் எந்த மசோதாவையும் தடையின்றி நிறைவேற்றவும் முடியும்.

இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்காக மீதமுள்ள தனது பதவி காலத்தில் இன்னும் கடுமையான சீர்திருத்த கொள்கைகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எஞ்சிய 24–27 மாத ஆட்சி காலத்தில் புதிய சீர்திருத்தங்களால் மீண்டும் 8 சதவீத வளர்ச்சி நிலைக்கு திரும்ப இயலும். அதேநேரம் தற்போதுள்ள 7 சதவீத வளர்ச்சியால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்