சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் மனு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் மனு ஒன்றை அளித்தனர்.

Update: 2017-03-23 22:00 GMT

புதுடெல்லி

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் குழுவினர் நேற்று போராட்ட குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தல், தேசிய நதிகளை ஒருங்கிணைத்தல், விவசாய பொருட்களுக்கு சரியான விலையை விவசாயிகளே நிர்ணயித்தல், விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நாங்கள் போராடி வருகிறோம்.

எனவே, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் விவசாயிகள் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க பணிக்குமாறு வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்ற ஒரு மனுவை நேற்று டெல்லியில் பிரதமர் இல்லத்திலும் விவசாயிகள் குழுவினர் அளித்து விட்டு வந்தனர்.

மேலும் செய்திகள்