டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 181 இடங்களில் கைபற்றியது

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 181 இடங்களில் கைபற்றி உள்ளது.

Update: 2017-04-26 14:04 GMT
புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 181 வார்டுகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது.

ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 48 வார்டுகளில் வெற்றிபெற்று 2-ம் இடத்திலும் காங்கிரஸ் கட்சி 38 வார்டில் வெற்றி பெற்று 3 இடத்திலும் உள்ளது.

டெல்லி மாநகராட்சி, கடந்த 2012-ம் ஆண்டு, வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சி என 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டது. 
இந்நிலையில், இந்த 3 மாநகராட்சிகளுக்கும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்த வார்டுகள் எண்ணிக்கை 272. இவற்றில் 2 வார்டுகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், 270 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டது.

181 வார்டுகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 48 வார்டுகளில் வெற்றிபெற்று 2-ம் இடத்திலும் காங்கிரஸ் கட்சி 38 வார்டில் வெற்றி பெற்று 3 இடத்த்தை கைப்பற்றியது.

மேலும் செய்திகள்