ஜம்மு-காஷ்மீரில் சமூக வலைதளங்களுக்கு திடீர் தடை:மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் சமூக வலைதளங்களுக்கு அம்மாநில அரசு திடீர் தடை விதித்துள்ளது.

Update: 2017-04-26 14:32 GMT
ஜம்மு,

ஜம்மு-காஷ்மீரில் டுவிட்டர்,வாட்ஸ் அப்,பேஸ்புக் ஆகியவற்றை தவறாக பயன்படுத்துவதாக அரசுக்கு புகார்கள் வந்தது. அதனை தொடர்ந்து பேஸ்புக்,வாட்ஸ் அப் உள்ளிட்ட 22 சமூக வலைதளங்களுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தடை விதித்துள்ளது. ஒரு மாதம் அல்லது மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும் என அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் திடீர் உத்தரவால் சமூகவலைதளத்தை பயன்படுத்துவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்