காஷ்மீர் வங்கியில் கொள்ளையடித்த பயங்கரவாதிகள் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு

காஷ்மீர் வங்கியில் கொள்ளையடித்த பயங்கரவாதிகள் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு என போலீசார் அறிவித்துள்ளனர்.

Update: 2017-05-05 13:24 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். விசாரணையில் வங்கியில் கொள்ளையடித்த பயங்கரவாதிகள் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஷகீர் அகமது, ஷபீர் அமத் தார், முகமது அஷ்ரப், ஆரிப் நபி தார் ஆகியோர் என தெரியவந்தது.  

இதையடுத்து வங்கி கொள்ளையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 4 பேர் குறித்து துப்புகொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்து உள்ளனர். மேலும் அந்த பயங்கரவாதிகள் 4 பேரின் புகைப்படங்களை புல்வாமா மாவட்டம் முழுவதும் ஒட்டி போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

முன்னதாக குல்காம் மாவட்டத்தில் ஒரு வேனை மறித்து போலீசார் உள்பட 7 பேரை சுட்டுக்கொன்ற ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி உமர் மஜித் என்பவரின் தலைக்கு போலீசார் ரூ.10 லட்சம் பரிசு அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்