நெல்லை, தூத்துக்குடி, திருச்சி ,திருப்பூர் உள்பட 30 ‘ஸ்மார்ட்’ நகரங்கள் பட்டியல் வெளியீடு

நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் உள்பட 30 ‘ஸ்மார்ட்’ நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

Update: 2017-06-23 07:20 GMT
புதுடெல்லி,

‘ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதில் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே 60 நகரங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று மேலும் 30 நகரங்கள் இத்திட்டத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் திருவனந்தபுரம் (கேரளா) முதலிடத்தில் உள்ளது. இது தவிர நயா ராய்ப்பூர், பிலாஸ்பூர் (சத்தீஸ்கர்), காந்திநகர், ராஜ்கோட், தசோத் (குஜராத்), அமராவதி (ஆந்திர பிரதேசம்), கரீம்புகர் (தெலுங்கானா), பாட்னா, முசாபர்பூர் (பீகார்), புதுச்சேரி, ஜம்மு, ஸ்ரீநகர், தகோத்(காஷ்மீர்), சாகர், சாத்னா(மத்திய பிரதேசம்), கர்னல் (அரியானா), பெங்களூரு (கர்நாடகம்), சிம்லா (இமாசல பிரதேசம்), டேராடூன் (உத்தரகாண்ட்) ஆகியவை அடங்கும்.

மேலும் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் ஆகிய நகரங்கள் ‘ஸ்மார்ட் நகரங்கள்’ பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவை தவிர பிம்ப்ரி சிங்ச்வாட் (மராட்டியம்), பாசிகட் (அருணாசலபிரதேசம்), அலகாபாத், அலிசூர், ஜான்சி (உத்தரபிரதேசம்), ஐசாவல் (மிசோரம்), காங்டாக் (சிக்கிம்) ஆகியவை ‘ஸ்மார்ட் நகரங்கள்’ பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதற்கான அறிவிப்பை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு இன்று அறிவித்தார்.

‘ஸ்மார்ட் நகரங்கள்’ அறிவிக்கப்பட்டுள்ள 26 நகரங்களில் அடிப்படி வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டுதல், 26 நகரங்களில் புதிய பள்ளிகள் மற்றும் ஆஸ்பத்திரிகள், 29 நகரங்கள் மறுவடிவமைப்பு மற்றும் ரோடுகள் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இவை தவிர தேர்ந்தெடுக்கப்பட உள்ள 10 நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் திண்டுக்கல், ஈரோடு, துட்டா நகர் (அருணாசலபிரதேசம்), நவி மும்பை, கிரேட்டர் மும்பை, அமராவதி (மராட்டியம்), இம்பால் (மணிப்பூர்), ஷில்லாங் (மேகாலயா) உள்ளிட்ட 20 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்