நேபாளம், பூடான் நாட்டு பயணத்துக்கு ‘ஆதார்’ செல்லுபடியாகாது மத்திய அரசு தகவல்

நேபாளம், பூடான் நாடுகளுக்கு எவ்வித விசாவும் இன்றி இந்தியர்கள் சென்றுவர முடியும். அங்கு பயணம் செல்லும் இந்தியர்கள் பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருந்தால் போதும்.

Update: 2017-06-25 21:23 GMT

புதுடெல்லி,

நேபாளம், பூடான் நாடுகளுக்கு எவ்வித விசாவும் இன்றி இந்தியர்கள் சென்றுவர முடியும். அங்கு பயணம் செல்லும் இந்தியர்கள் பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருந்தால் போதும். மேலும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், தங்கள் வயதை உறுதி செய்யும் புகைப்படம் ஒட்டிய சான்றை வைத்திருந்தால் எளிதில் பயணம் மேற்கொள்ளலாம்.

எனினும் இந்தியர்களின் தேசிய அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார் அட்டையை இந்த நாடுகளின் பயணத்தின்போது பயன்படுத்த முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது. நேபாளம், பூடான் நாட்டு பயணங்களில் இது செல்லுபடியாகாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் விவரங்களுடன் மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ஆதார் அட்டை, மத்திய–மாநில அரசுகளின் பல்வேறு மானியங்கள் மற்றும் திட்டங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்