சரக்கு, சேவை வரி தொடக்க நிகழ்ச்சிக்கு பாராளுமன்றத்தில் இன்று இரவு ஒத்திகை

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஜூன் 30–ந் தேதி நள்ளிரவு அமலுக்கு வருகிறது.

Update: 2017-06-27 23:30 GMT

புதுடெல்லி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஜூன் 30–ந் தேதி நள்ளிரவு அமலுக்கு வருகிறது. இது அமலுக்கு வருவதையொட்டி, பாராளுமன்றத்தில் 30–ந் தேதி இரவு 11 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நள்ளிரவை கடந்தும் இந்நிகழ்ச்சி நடைபெறும். ஜி.எஸ்.டி. வரி அமலாக்கத்துக்கு ஒத்துழைத்த மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளை பாராட்டும் வகையில், இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி சுமுகமாக நடைபெறுவதற்கு ஏதுவாக, பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று இரவு 10 மணிக்கு பிரமாண்ட ஒத்திகை நடைபெறுகிறது.

அதை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்த குமார், அத்துறையின் இணை மந்திரிகள் முக்தார் அப்பாஸ் நக்வி, எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோரோ அல்லது அத்துறையின் செயலாளர் ராஜீவ் யாதவோ மேற்பார்வையிடுவார்கள். நிதி அமைச்சகம் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

மேலும் செய்திகள்