காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு அருகே நேற்று காலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Update: 2017-07-23 21:35 GMT

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு அருகே நேற்று காலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தனர். இதனை கண்டறிந்த பாதுகாப்புபடை வீரர்கள் பயங்கரவாதிகளை தங்களிடம் சரணடைந்து விடும்படி எச்சரித்தனர்.

ஆனால் அதற்கு செவிசாய்க்காத பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்ற பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிக்க அந்த பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்