காந்தியின் குடும்ப புகைப்படங்களை நீக்க பள்ளி கூடங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய அரசு ஊழியர்

காந்தியின் குடும்ப புகைப்படங்களை வலைதளங்களில் இருந்து நீக்கும்படி பள்ளி கூடங்களுக்கு ஷில்லாங் மண்டல அலுவலக ஊழியர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Update: 2017-08-24 15:48 GMT
புதுடெல்லி,

கடந்த 16ந்தேதி ஷில்லாங் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து 90 பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.  அதில், உங்களது வலைதளங்களில் இருந்து காந்தி குடும்பத்தினரின் புகைப்படங்களை நீக்கி விடுங்கள்.
 
ஆணையாளர், துணை ஆணையாளர், மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி மற்றும் பிரதமர் புகைப்படங்களை பயன்படுத்துங்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த 22ந்தேதி நவோதயா வித்யாலயா சமிதி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய செய்தியில், முந்தைய சுற்றறிக்கை அதிகாரபூர்வமற்றது என தெரிவித்திருந்தது.

இந்த சுற்றறிக்கையை அனுப்பும்படி ஷில்லாங் மண்டல அலுவலக ஊழியருக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை.  அதிகாரபூர்வமற்ற மற்றும் தவறான தகவல் அளித்த அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் நவோதயா வித்யாலயா சமிதியின் இணை ஆணையாளர் ராமசந்திரா தெரிவித்துள்ளார்.

நவோதயா வித்யாலயா பள்ளிகள் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளுடன் இணைந்து நடத்தப்படுபவை.  இவற்றில் 6 முதல் 12 வரை வகுப்புகள் உள்ளன.  நாட்டில் இதுபோன்று 590 பள்ளி கூடங்கள் உள்ளன.

மேலும் செய்திகள்