குர்மீத் சிங்கை தப்பிக்க வைக்க போலீசார் முயன்றது அம்பலம்

குர்மீத் சிங்கை கடந்த 25–ந் தேதி பஞ்ச்குலாவில் உள்ள கோர்ட்டுக்கு அழைத்து வந்த பாதுகாவலர் குழுவில் அரியானா போலீசார் 5 பேரும் இருந்தனர்.

Update: 2017-08-27 22:45 GMT

சண்டிகார்,

கற்பழிப்பு வழக்கு விசாரணைக்காக ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைவர் குர்மீத் சிங்கை கடந்த 25–ந் தேதி பஞ்ச்குலாவில் உள்ள கோர்ட்டுக்கு அழைத்து வந்த பாதுகாவலர் குழுவில் அரியானா போலீசார் 5 பேரும் இருந்தனர். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும், அந்த பாதுகாவலர்கள் அவரை தப்பிக்கவைக்க முயன்றது தற்போது அம்பலமாகி உள்ளது.

இதை அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், அந்த போலீசார் உள்பட குர்மீத்தின் பாதுகாவலர்கள் 7 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைப்போல கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக குர்மீத்தின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் மீதும் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தேரா சச்சா சவுதா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான ஆதித்யா இன்சான், திமான் இன்சான் ஆகிய 2 பேர் மீது நேற்று தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பத்திரிகை நிருபர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அரியானா போலீஸ் டி.ஜி.பி. சாந்து கூறினார்.

மேலும் செய்திகள்