தேரா சச்சா தலைவர் ராம் ரஹிமுக்கு 20 ஆண்டுகள் சிறை: சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்

தேரா சச்சா சவுதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு இரு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள் என மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-08-28 15:56 GMT
புதுடெல்லி,

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இரு பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என கடந்த வெள்ளி கிழமை தீர்ப்பு வழங்கியது.  தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ரோத்தக்கில் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இன்று பிற்பகல் 2:30 மணியளவில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ஜெகதீப் சிங், சாமியார் குர்மீத் ராம் ரஹிமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இதேபோன்று மற்றொரு வழக்கில் ராம் ரஹிமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  இதனால் சாமியார் ராம் ரஹிமுக்கு இரு வழக்குகளில் தலா 10 வருடங்கள் என மொத்தம் 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்