தலைநகர் டெல்லியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

தலைநகர் டெல்லியில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

Update: 2017-08-29 12:26 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் மலேரியா, சிக்கன் குன்யா மற்றும் டெங்கு ஆகிய தொற்றுநோய்கள் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்து வருகிறது. 

ஏடிஸ் கொசு வகையால் உண்டாகும் டெங்கு காய்ச்சலால் இரத்தத்தில் உள்ள பிலேட்லட்டின் எண்ணிக்கை குறைகிறது. மேலும், இது இரத்த கசிவை ஏற்படுத்துகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

மேலும் செய்திகள்